Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜப்பான் புகையிலை நிறுவன சொத்துகளை கைப்பற்றியது ரஷ்யா

ஜப்பான் புகையிலை நிறுவன சொத்துகளை கைப்பற்றியது ரஷ்யா

நிறுவனத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஜப்பான் அரசு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் சட்சுகி கட்டயாமா தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

ஜப்பான் டொபாக்கோ இன்டர்நேஷனலின் (ஜேடிஐ) ரஷ்யப் பிரிவுகள் உள்ளூர் நிறுவனமான ஜேஎஸ்சி இண்டஸ்ட்ரியல் அசெட்ஸின் தற்காலிக நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஜப்பான் டொபாக்கோ இன்டர்நேஷனலின் ரஷ்யப் பிரிவுகளை கைப்பற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் சொத்துகள், வர்த்தகம் ரஷ்ய நிறுவனத்தால் தற்காலிகமாக நிர்வகிக்கப்படுகிறது.

நிறுவனத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஜப்பான் அரசு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் சட்சுகி கட்டயாமா தெரிவித்தார்.

வின்ஸ்டன், கேமல் சிகரெட்டுகளைத் தயாரிக்கும் ஜேடிஐ, 1999 முதல் ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. விற்பனை அளவில் ரஷ்ய சிகரெட் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனத்துக்கு அங்கு 4,000 ஊழியர்களும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரோஸ்டோவ் ஆன் டான் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி ஆலைகளும் உள்ளன. ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து, நிலைமையையும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருவதாக நிறுவனம் தெரிவித்தது.

புதிய முதலீடுகளையும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் 2022-ல் நிறுத்தியபோதும், ரஷ்யாவில் எரித்துப் பயன்படுத்தும் புகையிலைப் பொருட்கள் சந்தையில் ஜேடிஐ 41 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது. குழுமத்தின் மொத்த விற்பனையில் ரஷ்ய வணிகம் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை பங்களிப்பதாக ஜெஃபரீஸ் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

செப்டம்பர் முதல் நெஸ்லே, ஓஷான், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துகளையும் ரஷ்யா தற்காலிக நிர்வாகத்தின்கீழ் கொண்டுவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் ஜப்பானும் இணைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலத் தீவுப் பிரச்சினையும் உள்ளது.

முந்தைய செய்தி
ரூ.639 கோடியில் சாலை பணிகள்
அடுத்த செய்தி
ஒரே நாளில் ரூ.217.12 லட்சம் கோடி இழப்பு - ஏஐ பங்குகள் சரிவு

தொடர்புடைய செய்திகள்